கஸ்டமர் கேருக்கு 24,000 முறை கால் செய்து டார்ச்சர் செய்தவர் கைது..!
உங்கள் செல்போனில் இருந்து நீங்கள் இலவசமாக அழைக்க வேண்டும் என்றால் ஒன்று அவசர உதவி இல்லை என்றால் சிம்கார்டு நிறுவனங்களின் புகார் எண்கள்தான். ஆனால் ஒருவர் சுமார் 24 ஆயிரம் முறை கஸ்டர்மர் கேர் நம்பருக்கு அழைத்து டார்ச்சர் செய்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா அதோ அதைப் பற்றிப் படியுங்கள்

 


எகித்தோஷி ஒஹாமோடோ



ஜப்பானைச் சேர்ந்தவர் எகித்தோஷி ஒஹாமோடோ ஓய்வு பெற்றவரான இவருக்கு தற்போது 71 வயதாகிறது. தற்போது பென்சன் வாங்கி வாழ்க்கை நடத்தி வருகிறார். இவர் தான் கஸ்டமர் கேர் நம்பருக்கு 24 ஆயிரம் முறை கால் செய்தவர்



 


கஸ்டமர் கேர்



ஜப்பானைச் சேர்ந்த கேடிடிஐ என்ற நிறுவனத்தின் சிம்கார்டை பயன்படுத்தி வரும் இவர் கடந்த அக்., மாதம் மட்டும் ஒரே வாரத்தில் 411 முறை இவரிடம் இருந்து போன் வந்துள்ளது. போனில் இவர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சந்தேகத்தைக் கேட்பார். பல சமயம் ஏற்கனவே கேட்ட சந்தேகங்களையும் கேட்பார்.