விபத்தில் சிக்கிய காருக்குள்ளேயே இருந்து டிக்டாக் செய்த பெண்கள் வைரலாகும் வீடியோ

அமெரிக்காவில் இரண்டு பெண் கார் விபத்தில் சிக்கிய போதும் அந்த காருக்குள்ளேயே இருந்து டிக்டாக் மற்றம் டப்ஸ் மாஷ் வீடியோக்களை செய்து வெளியிட்டது தற்போது வைரலாக பரவி வருகிறது.


அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது கார் வளைவுப் பாதையில் திரும்பியபோது கார் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது.


விபத்தில் சிக்கியதும் இது குறித்து அவர்களே போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதற்கிடையில் அப்பகுதிக்கு போலீசார் வரும் வரை அவர்கள் சும்மா இருக்காமல் விபத்தில் சிக்கிய காருக்குள்ளேயே அமர்ந்து டிக்டாக் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.