மறுபிறவினு ஒன்று இருக்கா இல்லையா? யார் என்னவா பிறப்பாங்க?... கருட புராணம் என்ன சொல்கிறதுனு பாருங்க...
மனிதன் இறந்த பின் ஆனு்மா எங்கு செல்லும் என்ற கேள்விக்கு பதில் சொல்வது என்பது எப்போதுமே சவாலான விஷயமாகவே இருக்கிறது. அது பற்றிய பல சுவாரஸ்யமான விஷயங்கள் பற்றி கருட புராணம் என்ன சொல்கிறது என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

 


​மறுபிறவி இருக்கா? இல்லையா?



வைகுண்ட ஏகாதசி இப்போது தான் முடிந்திருக்கிறது. அதற்குள் இப்படி ஒரு சந்தேகமா என நீங்கள் கேட்கலாம். ஆமாங்க. முக்தி என்பது என்ன? மறுபிறப்பு இல்லாத நிலை தான். முக்தி என்ற ஒன்றைப் பற்றி பேசும்போது, மறுபிறவியைப் பற்றியும் கட்டாயம் பேச வேண்டும் தானே. மறுபிறவி பற்றி கருட புராணம் அப்படி என்ன தான் சொல்கிறது என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.


மறுபிறவி என்பதெல்லாம் ஒன்றும் கிடையாது, இருக்கிறது, இல்லை என மறுபிறவி குறித்து உலகில் பல்வேறான கருத்துக்கள் உலகம் முழுவதும் நிலவுகின்றன. ஆனால் அதுபற்றி கருட புராணத்தில் மிகத் தெளிவாக சில விஷயங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. அதைத் தெரிந்து கொண்டாலே மறுபிறவி குறித்த குழப்பங்கள் எல்லாம் தீர்ந்து விடும்.


கருட புராணம் மனிதர்கள் மட்டுமல்லாது, உலக ஜீவ ராசிகள் அனைவருக்கும் மறுபிறவி இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி பேசுகிறது.